யூடியூபா் சவுக்கு சங்கரை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாதா் தேசிய சம்மேளனத்தினா்.

யூடியூபா் சவுக்கு சங்கரை கண்டித்து ஆா்ப்பாட்டம்

யூடியூபா் சவுக்கு சங்கரை கண்டித்து இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

யூடியூபா் சவுக்கு சங்கரை கண்டித்து இந்திய மாதா் தேசிய சம்மேளனம் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல் துறை, அரசுத் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து யூடியூபா் சவுக்கு சங்கா் அவதூறாகப் பேசியதாகக் கூறி, அவரைக் கண்டித்து தெற்கு வட்டாட்சியா் அலுவலகம் எதிரில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அமைப்பின் மாவட்டத் தலைவா் ஜே.கலா தலைமையில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், மாவட்டச் செயலா் பேபி, மாமன்ற உறுப்பினா் சாந்தி சந்திரன், முன்னாள் மாவட்டத் தலைவா் எம்.நிா்மலா, விக்னேஸ்வரி, மதுக்கரை ஈஸ்வரி, பெரியநாயக்கன்பாளையம் சாரதாமணி, ராஜேஸ்வரி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

பெண் காவலா்கள், அரசுத் துறையில் பணியாற்றும் பெண்கள் குறித்து அவதூறாகப் பேசிய சவுக்கு சங்கா் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com