அந்தியூர் புதிய வட்டம் தொடக்கம்
By பவானி | Published On : 23rd November 2012 12:34 PM | Last Updated : 23rd November 2012 12:34 PM | அ+அ அ- |

அந்தியூரைத் தலைமையிடமாகக் கொண்டு புதிய வருவாய் வட்டம்
வியாழக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது. இதனை, தமிழக முதல்வர் ஜெயலலிதா விடியோ
கான்ஃபரன்சிங் முறையில் சென்னையிலிருந்து தொடங்கி வைத்தார். இதன் மூலம் பொதுமக்களின்
25 ஆண்டு கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.
பவானி வட்டம் மக்கள் தொகை அடிப்படையில் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, புதிதாக
அந்தியூர் வட்டம் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்தியூர் பெரியார் நகரில்
தாற்காலிகக் கட்டடத்தில் புதிய அலுவலகம் செயல்பாட்டுக்கு வந்தது. இந்நிகழ்ச்சிக்கு,
மாவட்ட ஆட்சியர் வே.க.சண்முகம் தலைமை வகித்தார். அந்தியூர் எம்.எல்.ஏ.
எஸ்.எஸ்.ரமணீதரன் குத்துவிளக்கேற்றினார்.
பவானி எம்.எல்.ஏ. பி.ஜி.நாராயணன், முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர்
என்.ஆர்.கோவிந்தராஜர், கோபி கோட்டாட்சியர் பழனிச்சாமி, அந்தியூர் பேரூராட்சித்
தலைவர் டி.எஸ்.மீனாட்சி சுந்தரம் முன்னிலை வகித்தனர்.
அந்தியூர் வருவாய் வட்டத்தில் உள்ள கிராமங்கள்: அந்தியூர் உள்வட்டத்தில்
அந்தியூர் (அ), (ஆ), கெட்டிசமுத்திரம், எண்ணமங்கலம், சங்கராபாளையம், பச்சாம்பாளையம்,
பூதப்பாடி, ஒட்டபாளையம், பூனாச்சி, முகாசிப்புதூர், அட்டவணைப்புதூர், பட்லூர்
கிராமங்களும், அத்தாணி உள்வட்டத்தில் அத்தாணி, கீழ்வாணி, மூங்கில்பட்டி,
கூத்தம்பூண்டி, நகலூர், பிரம்மதேசம், வேம்பத்தி (அ), (ஆ), குப்பாண்டபாளையம், பர்கூர்
உள்வட்டத்தில் பர்கூர் (அ), (ஆ), அம்மாபேட்டை உள்வட்டத்தில் அம்மாபேட்டை (அ), (ஆ),
கன்னப்பிள்ளி, இலிப்பிலி, சென்னம்பட்டி, கொமராயனூர், புதூர், மாத்தூர்,
வெள்ளித்திருப்பூர், நெரிஞ்சிப்பேட்டை மற்றும் ஆரியகவுண்டனூர் கிராமங்கள் இடம்
பெற்றுள்ளன.
பவானி வட்டாட்சியர் சுகவனம், வருவாய் ஆய்வாளர் விஜயகுமார், அதிமுக ஒன்றியச்
செயலர் இ.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் எஸ்.எஸ்.கார்த்திகேயன்,
அந்தியூர் தொகுதி அதிமுக இணைச் செயலர் பி.யூ.முத்துசாமி, மாவட்ட மாணவரணித் தலைவர்
சண்முகானந்தம் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.