நிலம் கையக மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தல்

மத்திய அரசின் நிலம் கையக மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

மத்திய அரசின் நிலம் கையக மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என கொங்குநாடு வேட்டுவ கவுண்டர்கள் இளைஞர் நலச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இச் சங்கத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் கெளரவத் தலைவர் ரஞ்சிதம் ராமசாமி கவுண்டர் தலைமை வகித்தார். இதில், சிறப்பு அழைப்பாளர்களாக கொங்குநாடு வேட்டுவக்கவுண்டர் இளைஞர் நலச் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ராஜ்கவுண்டர், மாநிலத் தலைவர் பூலுவராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

கொடிவேரி அணையை கட்டி நீர்ப் பாசனத்தை பெருக்கிய கொங்காள்வான் மன்னனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் எந்த கட்சி தமிழகத்தில் பூரண மதுவிலக்க அமல்படுத்கிறதோ அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வேட்டுவக்கவுண்டரின் உள்பிரிவான வேடர், வேட்டுவர், வில்வேடுவர், மலைவாழ் வேடன், வேட்டுவர், புன்னம் வேட்டுவக்கவுண்டர், பூலுவ வேட்டுவக்கவுண்டர், பூலுவர், பூலுவக்கவுண்டர், புன்ன வேட்டுவக்கவுண்டர் ஆகிய பெயர்களில் உள்ளவர்களை மிகவும் பிற்படுத்தப்பட்ட வேட்டுவக்கவுண்டர் என்ற அறிவிக்க வேண்டும்.

சிறு, குறு விவசாயிகள பாதிக்கும் நிலம் கையக மசோதாவை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.

கொடுமுடியை தனி தாலுகாவாக அறிவிக்க வேண்டும். இல்லையெனில், விரைவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் மாநில பொருளாளர் வேலுசாமி, மாநில துணை பொதுச்செயலாளர் சஞ்ஜீவ், மாநில இளஞரணிச் செயலாளர் மகேந்திரன், மாநில மகளிரணி அமைப்பாளர் ஜமுனா உள்பட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com