செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எளிய வழிமுறை

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எளிய வழிமுறையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.

செல்லிடப்பேசி எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க எளிய வழிமுறையை பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது.
 இதுகுறித்து, பி.எஸ்.என்.எல். நிர்வாகம் வெளியிட்ட தகவல்:
 செல்லிடப்பேசி பயன்படுத்துவோர் அந்த எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு மார்ச் 2018 வரை மத்திய அரசு அவகாசம் அளித்துள்ளது. இந்நிலையில், ஆதார் எண்ணுடன் வாடிக்கையாளரே தங்களது செல்லிடப் பேசி  எண்ணை இணைப்பதற்கு 14546 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை செல்லிடப்பேசியில் 
அழைத்தால் பதிவு செய்யப்பட்ட குரல் சேவை ஒலிக்கும். அதில் விருப்ப மொழியைத் தேர்ந்தெடுத்து உங்கள் ஆதார் எண்ணை டைப் செய்ய வேண்டும். அது உடனடியாக தனித்துவ அடையாள எண் ஆணையமான யு.ஐ.டி.ஏ.ஐ.க்கு அனுப்பப்படும். அது தகவல்களை உறுதி செய்ததும் ஒன் டைம் பாஸ்வேர்டு செல்லிடப்பேசிக்கு வரும். அந்த எண்ணை உடனே டைப் செய்து அனுப்பிய பின் இணைப்பைத் துண்டிக்கலாம். அடுத்த நிமிடத்தில் உங்கள் எண் ஆதாருடன்  இணைத்ததை உறுதி செய்து குறுஞ்செய்தி வரும். சில நிமிடங்களில் இதை செய்துவிடலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com