ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம்

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி சார்பில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதி சார்பில், ஜெயலலிதா பிறந்த நாள் விழா ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. 
 கூட்டத்துக்கு, பெருந்துறை ஒன்றியச் செயலாளர் விஜயன் தலைமை வகித்தார். ஊத்துக்குளி ஒன்றியச் செயலாளர் ரவிசந்திரன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம் பங்கேற்றுப் பேசினார். 
 கூட்டத்தில், ஜெயலலிதாவின் 70-ஆவது பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதி பெருந்துறை, சோழீஸ்வரர் கோயிலில் காலை முதல் மாலை வரை அன்னதானம் நடைபெறும். பெருந்துறை தொகுதியில் உள்ள கோயில்களில் சிறப்பு பூஜைகள், வழிபாடு, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டது. 
 இதில், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினர் கே.எஸ்.பழனிசாமி, ஊராட்சி ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, பேரூராட்சி அவைத் தலைவர் நல்லசிவம், கூட்டுறவு விற்பனைச் சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெததீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com