பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.10.96 லட்சத்துக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு, வெள்ளை எள் கிலோ ரூ.72.69 முதல் ரூ.97.09 வரையிலும், கருப்பு எள் கிலோ ரூ.63.39 முதல் ரூ.84.89 வரையிலும், சிவப்பு எள் கிலோ ரூ.55.59 முதல் ரூ.75.19 வரையில் ஏலம் போனது. இங்கு 191 முட்டைகளில் 140.83 குவிண்டால் எள் மொத்தம் ரூ.10.96 லட்சத்துக்கு ஏலம் போனது.