மழை பெய்ய வேண்டி ஆத்தூர் அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

சிவகிரி, தொப்பம்பாளையம் ஆத்தூர் அம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

சிவகிரி, தொப்பம்பாளையம் ஆத்தூர் அம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டி அம்மனுக்கு சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் புரட்டாசி மாதத்தில் சிறப்பு பூஜை நடத்தப்படுவது வழக்கம். இந்த ஆண்டு புரட்டாசி மாதம் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா நடைபெற்றது. இரவு 7 மணிக்கு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீர் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. 
தொடர்ந்து, அம்மனுக்கு பொங்கல் படையல் வைத்து, மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கப்பட்டது.
சிவகிரி, கொடுமுடி  சுற்று வட்டாரப் பகுதிகளான தொப்பம்பாளையம், வேட்டுவபாளையம், கந்தசாமிபாளையம் ஆகிய பகுதிகளில் இரவு 10 மணியளவில் இடி, மின்னலுடன் பரவலாக மழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com