"புதுமையான கண்டுபிடிப்பில் இந்தியா முதலிடம் பிடிக்கும்'

புதுமையான கண்டுபிடிப்பில் 5 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, முதலிடத்தை பிடிக்கும் என்று

புதுமையான கண்டுபிடிப்பில் 5 ஆவது இடத்தில் இருக்கும் இந்தியா, முதலிடத்தை பிடிக்கும் என்று அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைவர் அனில் தத்தாத்ரேய சஹஸ்ரபுத்தே தெரிவித்தார்.
சத்தியமங்கலத்தை அடுத்த பண்ணாரிஅம்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் 19 ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதற்கு, கல்லூரித் தலைவர் எஸ்.வி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தார். 
கிருஷ்ணா கல்விக் குழுமங்களின் தலைவர் மலர்விழி முன்னிலை வகித்தார். 
இதில்,  அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கழகத்தின் தலைவர் அனில் தத்தாத்ரயா சஹஸ்ரபுத்தே பங்கேற்று பேசியதாவது: 
மாணவர்கள் திறமையை வளர்த்துக் கொள்வதுடன் புதுமைகளை கண்டுபிடிக்க வேண்டும். பொறியியல் பட்டதாரிகள் தொழில்தொடங்கி பலருக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தர முயற்சிக்க வேண்டும். இந்தியா அடுத்த 5 ஆண்டுகளில் புதுமையான கண்டுபிடிப்புகளுக்கு மையமாகத் திகழும். கலைக்கல்லூரி படிப்பாக இருந்தாலும், பொறியியல் படிப்பாக இருந்தாலும் மாணவர்கள் தங்கள் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 
முகநூல், ஆப்பிள், கூகுள் போன்ற நிறுவனங்களில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்திய பெருமை இந்திய மாணவர்களையே சேரும். தற்போதும் கூட பொறியியல் மாணவர்களுக்கு வேலைவாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்றார். 
விழாவில், சிறந்த மாணவர்கள் நவீன், கலாவதி கார்த்திகேயன், ஆர்.பார்வதி ஆகியோருக்கு தங்கப் பதக்கம் வழங்கப்பட்டன. இந்த விழாவில் 1300 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com