கழிப்பறையில் தண்ணீர் இல்லாததால் ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டம்

மும்பை செல்லும் ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லாததாதால் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

மும்பை செல்லும் ரயில் கழிப்பறையில் தண்ணீர் இல்லாததாதால் அபாயச் சங்கிலியை இழுத்து ரயிலை நிறுத்தி பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 
கோவையில் இருந்து மும்பை லோகமான்ய திலக் ரயில் நிலையம் வரை செல்லும் குர்லா எக்ஸ்பிரஸ் ரயில் ஈரோடு ரயில் நிலையத்துக்கு தினமும் காலை 10.25 மணிக்கு வந்து 5 நிமிடங்கள் நின்று புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில், புதன்கிழமை காலை கோவையில் இருந்து கால தாமதமாகவே ரயில் புறப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையத்துக்கு வரும்போது முன்பதிவுப் பெட்டிகளில் உள்ள கழிவறையில் தண்ணீர் இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்தனர்.
ஆனால், ரயில்வே நிர்வாகம் தரப்பில் உரிய பதில் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், ஈரோடு ரயில் நிலையம் வந்தபோது முன்பதிவுப் பெட்டியில் இருந்த பயணிகள் தண்ணீர் வராதது குறித்து ரயில்வே ஊழியர்களிடம் கூறினர். அப்போதும், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால், ஆத்திரமடைந்த பயணிகள் ரயில் புறப்பட்டவுடன் அபாயச் சங்கிலியைப் பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பயணிகளுக்கும், ரயில்வே அலுவலர்களுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த ரயில்வே பாதுகாப்பு படையினர் பயணிகளை சமாதானப்படுத்தினர்.  இதனையடுத்து, 20 நிமிடங்களுக்குப் பிறகு கழிவறையில் தண்ணீர் நிரப்பப்பட்டு ரயில் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com