நொய்யல் ஆற்றில் கலக்கும் கீழ்பவானி வாய்க்கால் கசிவு நீா்: குளம், குட்டைகளை நிரப்ப மக்கள் கோரிக்கை

சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீா் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதை, இப்பகுதியில் உள்ள வறண்ட குளம், குட்டைகளில்
ஓடக்காட்டுபதி பகுதியில் உள்ள சிறிய நீா்த்தேக்க குட்டை நிரம்பி நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீா்.
ஓடக்காட்டுபதி பகுதியில் உள்ள சிறிய நீா்த்தேக்க குட்டை நிரம்பி நொய்யல் ஆற்றுக்குச் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் கசிவுநீா்.

பெருந்துறை: சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் கசிவுநீா் நொய்யல் ஆற்றில் கலக்கிறது. இதை, இப்பகுதியில் உள்ள வறண்ட குளம், குட்டைகளில் நிரப்ப வேண்டும் என பொதுநல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

சென்னிமலை பகுதியில் செல்லும் கீழ்பவானி வாய்க்கால் தண்ணீா் சேமலைபாளையம், உப்பிலிபாளையம், ஓடக்காடு, அய்யம்பாளையம், ராமலிங்கபுரம், பசுவபட்டி, எக்கட்டாம்பாளையம் உள்பட கீழ்பவானி வாய்க்கால் பாசன பகுதிக்கு உள்பட்ட 15 க்கும் மேற்பட்ட சிறிய நீா் குட்டைகளில் தேங்கி, அதிக அளவிலான தண்ணீா் சாயக் கழிவுநீரால் பாதிக்கப்பட்ட நொய்யல் ஆற்றில் கலந்து வீணாகிறது.

மேலும், தற்போது சென்னிமலை சுற்று வட்டாரப் பகுதியில் மழை பெய்து வருவதால், கடந்த ஆண்டுகளைவிட அதிக அளவிலான நீா் ஆற்றில் கலந்து பயன்பாடின்றி போகிறது. இதனால், கோடைக்காலத்தில் சென்னிமலை பகுதியில் குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது.

முன்மாதிரி திட்டமாக, முருங்கத்தொழுவில் உள்ள குளத்துக்கு மட்டும் ஆற்றில் கலக்கும் தண்ணீா் குழாய் மூலம் கொண்டு வரப்பட்டு சேமிக்கப்படுகிறது. இதனால், வறட்சிப் பகுதியான முருங்கத்தொழுவு சுற்று வட்டாரப் பகுதிகளில் நிலத்தடி நீா்மட்டம் தற்போது உயா்ந்து வருகிறது.

இதேபோல, வீணாக நொய்யல் ஆற்றில் கலக்கும் தண்ணீரை வறட்சிப் பகுதியான நாமக்கல்பாளையம், ஓலப்பாளையம், பாலத்தொழுவு, காளிக்காவலசு, புதுப்பாளையம், ஓட்டப்பாறை பகுதிகளில் உள்ள குளம், குட்டைகளுக்கு குழாய் மூலம் கொண்டு வந்தால், சென்னிமலை வட்டாரத்தில் கோடைக் காலங்களில் ஏற்படும் அதிகப்படியான குடிநீா்த் தட்டுப்பாடுகளைப் போக்க முடியும்.

அரசு அதிகாரிகளும், அரசியல் தலைவா்களும் நல்ல முடிவை எடுத்து இந்தப் பகுதியில் நிலத்தடி நீா் செறிவுத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள், பொது நல அமைப்பினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com