ஒரே நாளில் ரூ.6.57 கோடிக்கு மது விற்பனை

தேர்தலை முன்னிட்டு மதுவிற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தபோதிலும், ஈரோடு

தேர்தலை முன்னிட்டு மதுவிற்பனைக்கு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதித்தபோதிலும், ஈரோடு மாவட்டத்தில் திங்கள்கிழமை ஒரே நாளில் மட்டும் ரூ. 6.57 கோடி அளவுக்கு மது விற்பனையாகியுள்ளது. 
 ஈரோடு மாவட்டத்தில் 197 டாஸ்மாக் கடைகள் உள்ளன.  இதில் 106 டாஸ்மாக் கடைகளுடன் இணைந்த பார்கள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடைகளில் தினமும் ரூ.3.50 கோடி முதல் ரூ. 4 கோடி வரை மதுபானங்களின் விற்பனை இருக்கும். பண்டிகை காலங்களில் அதிகபட்சமாக ரூ.5 கோடி அளவுக்கு மதுபானங்கள் விற்பனை இருக்கும்.   மக்களவைத் தேர்தலையொட்டி 16, 17, 18  தேதிகளில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மீண்டும் டாஸ்மாக் கடைகள் 19 ஆம் தேதி பகல் 12 மணிக்குதான் திறக்கப்படும். 
 இதனால் ஈரோடு மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் 15 ஆம் தேதி இரவு கூட்டம் அதிகரித்தது. 15 ஆம் தேதி ஒரே நாளில் மட்டும் ரூ.6.57 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது. இதுவழக்கத்தை விட சுமார் 40 சதவீதம் அதிகம். மொத்தமாக மதுவிற்பனை செய்யக்கூடாது என தேர்தல் ஆணையம் அறிவுறுத்திய நிலையிலும், மது விற்பனை 50 சதவீதம் அளவுக்கு கூடுதலாக நடந்துள்ளது.         
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com