பவானி சங்கமேஸ்வரர் கோயிலில் 63 சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்

பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகம், சன்னதி, கூடுதுறை பரிகார மண்டபங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்களின் நடமாட்டத்தை


பவானி சங்கமேஸ்வரர் கோயில் வளாகம், சன்னதி, கூடுதுறை பரிகார மண்டபங்கள் உள்பட அனைத்துப் பகுதிகளிலும் பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கவும், பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் 63 இடங்களில் சிசிடிவி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
பவானி சங்கமேஸ்வரர் கோயில் புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாகவும், காவிரி, பவானி நதிகள் சங்கமிக்கும் கூடுதுறை பரிகாரத் தலமாகவும் திகழ்கிறது. தென்னக அளவில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகவும் விளங்குவதால் இங்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். 
விழாக் காலங்களில் பல்லாயிரக்கணக்கானோர் வந்து புனித நீராடிச் செல்வதும் வழக்கம். 
இக்கோயிலுக்கு வரும் பக்தர்களின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் கோயில் வளாகத்துக்குள் மட்டும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தன. 
இந்நிலையில், தற்போது கோயில் வளாகம் மட்டுமின்றி சங்கமேஸ்வரர், வேதநாயகி, பெருமாள் கோயில் சன்னதிகள் உள்பட சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 
மேலும், பவானி ஆற்றங்கரையோரத்தில் கோயிலின் நுழைவாயில் தொடங்கி, வாகன நிறுத்துமிடங்கள், கோயில் கோபுர நுழைவாயில்கள், கூடுதுறையில் உள்ள பரிகார மண்டபங்கள் உள்பட 63 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
மேலும், மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் 360 டிகிரி கோணத்தில் சுழன்று கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கேமராக்கள் இரவு நேரங்களிலும் மிகத் துல்லியமாக காட்சிகளைப் பதிவு செய்யும் அதிநவீன தொழில்நுட்பத்தைக் கொண்டவை ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com