வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் திருட்டு
By DIN | Published On : 27th April 2019 07:40 AM | Last Updated : 27th April 2019 07:40 AM | அ+அ அ- |

பவானி அருகே வீட்டின் பூட்டை உடைத்து எட்டரைப் பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
பவானியை அடுத்த புன்னம், சொங்கோடம்பாளையத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து (64). விவசாயி. இவர், தனது குடும்பத்துடன் வெள்ளிக்கிழமை தோட்டத்துக்குச் சென்றுவிட்டு பிற்பகலில் வீடு திரும்பினர். அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்து. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த எட்டரை பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. இதுகுறித்த அவர் அளித்த புகாரின்பேரில் ஆப்பக்கூடல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.