புத்தகத் திருவிழாவில் திரண்ட அரசுப் பள்ளி மாணவர்கள்

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று அரசுப் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 

ஈரோடு புத்தகத் திருவிழாவில் ஞாயிற்றுக்கிழமை அன்று அரசுப் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் வந்து புத்தகங்களை வாங்கிச் சென்றனர். 
 ஈரோடு புத்தகத் திருவிழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வரும் 12 ஆம் தேதி வரை நடைபெறும் புத்தகத் திருவிழாவில் 3 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான மக்கள் திரண்டனர்.  ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே மயிலம்பாடி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 மாணவிகள் 10-க்கும் மேற்பட்டோர் பெற்றோர், ஆசிரியர் துணை இல்லாமல் தனியாக புத்தகத் திருவிழாவுக்கு வந்து,  அரங்குகளில் பாடம் தொடர்புடைய கையேடுகள் மற்றும் ரூ.10, ரூ. 20 விலையில் கிடைக்கும் கதைப் புத்தகங்கள், தன்னம்பிக்கை புத்தகங்ளை வாங்கிச் சென்றனர். 
 இதுகுறித்து மாணவிகள் கூறியதாவது:
 ஆண்டுமுழுவதும் பணம் சேர்த்து அதை கொண்டுவந்து புத்தகங்களை வாங்கியுள்ளோம். பாடம் தொடர்பான ஒப்பீட்டுப் புத்தகங்களை வாங்கிச் செல்கிறோம். இத்தகையப் புத்தகங்கள் வழக்கான புத்தகக் கடைகளில் கிடைக்குமா என தெரியவில்லை.  அதனால் பள்ளி தொடங்கி 2 மாதங்கள் முடிந்தாலும் இப்போது வாங்கிச் செல்கிறோம். இந்த புத்தகங்களை நாங்கள் அனைவரும் பயன்படுத்திக்கொள்வோம் என்றனர். 
 ரூ.250-க்கு மேல் புத்தகம் வாங்கிய மாணவிகளுக்கு மக்கள் சிந்தனைப் பேரவை மூலம் அளிக்கப்படும் நூல் ஆர்வலர் என்ற சான்றினை அதன் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் வழங்கி பாராட்டினார். 
அப்போது அவர் புத்தகத் திருவிழாவுக்கு வந்து செல்லும் மாணவர்கள் வெறும் கையுடன் திரும்பக்கூடாது என்பதற்காக குறைந்த விலையில் திருக்குறள் புத்தகங்களை வழங்க முடிவு செய்துள்ளதாகவும். நன்கொடையாளர்கள் மூலம் இந்தத் திட்டம் அடுத்த ஆண்டு முதல் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.
   மாணவர்களுக்கான சிடிக்கள்:   புத்தகக் கண்காட்சியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பாடம் தொடர்புடைய ஒப்பீடு, பயிற்சிப் புத்தகங்கள், டிவிடிகளுக்கு என 50-க்கும் மேற்பட்ட அரங்குகள் உள்ளன. 
  இதில் சமச்சீர் மற்றும் சிபிஎஸ்இ பாடங்கள், ஆங்கில மற்றும் தமிழ் வழி மாணவர்கள் பயன்படக்கூடிய வகையில் பல்வேறு வகையான 2 டி மற்றும் 3 டி  டிவிடிக்கள் தயாரித்து குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பயன்படக்கூடிய வகையில் வைக்கப்பட்டுள்ளன. 
  1 முதல் பிளஸ் 2 வரை வகுப்பு சமச்சீர் டிவிடிக்கள் மாணவர்கள் மனதில் பதியும் வகையில் திரைப்படம்போல் பாடங்களை எளிதாக புரிந்துகொள்ள உதவும். 10 மற்றும் 12ஆம் வகுப்புக்கு 1, 2, 5, 10 மார்க் வினா வங்கி தலைப்பு வாரியாக நமக்கு நாமே பயிற்சி எடுத்துக்கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இவை அதிக மதிப்பெண்கள் பெற மாணவர்களுக்கு உதவும். 
 மேலும் ஸ்போக்கன் இங்கிலீஷ், ஆங்கில இலக்கணம், ஸ்போக்கன் ஹிந்தி போன்றவற்றை தமிழ் மொழியின் மூலம் எளிதாக கற்கலாம். பிரெஞ்ச், பொதுஅறிவு, என்சைக்ளோபிடியா என அனைத்து விதமான டிவிடிக்களும் விற்பனைக்கு உள்ளன. 1 முதல் 10ஆம் வகுப்பு வரை ஒலிம்பியாட் சிடிக்களும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை தேர்வுக்கு தயார்படுத்தும் சிடிக்களும், யூபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, என்டிஎஸ்சி உள்ளிட்ட அனைத்து நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்தும் சிடிக்களும், போட்டோஷாப், ஆட்டோகேட், மாயா, சி, விபி, ஜாவா போன்ற டியுட்டர் மற்றும் கேம்ஸ் சிடிக்களும் இடம்பெற்றுள்ளன. 
 குழந்தைகளுக்கான நர்சரி, செல்லப் பாப்பா பாடல்கள், உடற்பயிற்சி, நடனம், சுற்றுலாத் தலங்கள் பற்றிய விவரங்கள் போன்ற எண்ணற்ற தலைப்புகளில் சிடிக்கள் உள்ளன. ரூ.99 முதல் பல்வேறு விலையில் சிடி மற்றும் டிவிடிக்கள் உள்ளன. இந்த கண்காட்சியில் அனைத்து வகையான சிடிக்களுக்கும் 10 முதல் 20 சதவீதம் முதல் சிறப்பு தள்ளுபடி அளிக்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com