கோவை மாவட்டத்தில் பலத்த மழை: ஒரே நாளில் ஒரத்துப்பாளையம் அணையின் நீர் மட்டம் 15 அடி உயர்ந்தது

கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது. 

கோவை மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருவதால் ஒரத்துப்பாளையம் அணையின் நீர் மட்டம் ஒரே நாளில் 15 அடி உயர்ந்தது. 
சென்னிமலை அருகே உள்ளது ஒரத்துப்பாளையம் அணை. நொய்யல் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள, இந்த அணையின் உயரம் 39.37 அடி ஆகும். இந்த அணைக்கு வரும் தண்ணீரில் திருப்பூர் சாயக் கழிவுகள் அதிக அளவில் கலந்ததால் அணைக்கு வரும் தண்ணீர் முழுவதும் மாசடைந்தது.
பின்னர், பாதிக்கப்பட்ட விவசாயிகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் அணைக்கு வரும் தண்ணீரை தேக்கி வைக்காமல் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இந்த நிலையில், தற்போது கோவை மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் நொய்யல் ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதனால், ஒரத்துப்பாளையம் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 15 அடியாக உயர்ந்தது. வெள்ளிக்கிழமை மாலை 3 மணி நிலவரப்படி அணைக்கு 1,290 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இதனால், அணையின் நீர் மட்டம் 15 அடியாக உயர்ந்தது. அணைக்கு வரும் தண்ணீரை கீழ் மதகுகள் வழியாக 542 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. 
இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில், ஒரத்துப்பாளையம் அணை நிரம்பி வருவது மகிழ்ச்சியை அளிக்கிறது. ஆனால், இந்த மழை நீரைப் பயன்படுத்தி திருப்பூர் பகுதியில் உள்ள சாயத் தொழிற்சாலைகளில் இருந்து சாயக் கழிவுகளை வெளியேற்றி விடுவார்கள் என்ற அச்சம் உள்ளது.
அதனால், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் திருப்பூர் பகுதியில் முறைகேடாக சாயக் கழிவுகளை வெளியேற்றும் தொழிற்சாலைகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com