வேணுகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீமத் கீதா மஹா ஹோமம்

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீமத் கீதா மஹா ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

கிருஷ்ண ஜயந்தியையொட்டி, சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி கோயிலில் ஸ்ரீமத் கீதா மஹா ஹோமம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 
சத்தியமங்கலத்தில் உள்ள கோயில்கள், வீடுகளில் கோகுலாஷ்டமி சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. அக்ரஹாரம் பகுதியில் உள்ள வீடுகளில் கிருஷ்ணர் பாதம் வரைந்து, கண்ணனுக்குப் பிடித்த உணவுகளை படைத்து விழாவைக் கொண்டாடினர்.
சத்தி வேணுகோபால சுவாமி ஆலயத்தில் வெள்ளிக்கிழமை சிறப்பு வழிபாடு பூஜையும், அதைத் தொடர்ந்து, கோயில் 108 கால் மண்டபத்தில் அர்ச்சகர் ஆனந்தன் தலைமையில் ஸ்ரீமத் கீதா ஹோமமும் நடைபெற்றன. இதில், பகவத்கீதை படித்த  50 பெண் பக்தர்கள் கிருஷ்ணரை போற்றி பகவத் கீதையுடன் காயத்திரி மந்திரங்களைப் பாடினர். நண்பகலில் மூலவருக்கு அபிஷேகமும், சுவாமி புறப்பாடு, உறியடி நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், ஏராளமான பக்தர்கள் 
கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com