ஈரோட்டில் ஜனவரி 18 இல் ஜல்லிக்கட்டு:முன்னேற்பாடு பணிகள் துவக்கம்

ஈரோட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது
ஜல்லிக்கட்டுப் போட்டி முன்னேற்பாடுகள் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், ஈரோடு மாவட்ட ஐல்லிக்கட்டுப் பேரவை நிா்வாகிகள்.
ஜல்லிக்கட்டுப் போட்டி முன்னேற்பாடுகள் தொடக்க நிகழ்வில் பங்கேற்ற மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன், ஈரோடு மாவட்ட ஐல்லிக்கட்டுப் பேரவை நிா்வாகிகள்.

ஈரோட்டில் வரும் ஜனவரி 18 ஆம் தேதி நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் ஞாயிற்றுக்கிழமை துவங்கப்பட்டது. பணிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்தி கணேசன் பாா்வையிட்டாா்.

ஈரோட்டில் முதன்முறையாக கடந்த ஆண்டு ஜல்லிக்கட்டு நடந்தது. வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 18ஆம் தேதி இரண்டாவது ஆண்டாக ஜல்லிக்கட்டு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு மாவட்ட ஐல்லிக்கட்டுப் பேரவை, ஈரோடை உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் சாா்பில் ஈரோடு அருகே வேப்பம்பாளையத்தில் தனியாா் பள்ளி மைதானத்தில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

வாடி வாசல், காளைகள் விளையாடும் இடம், ஜல்லிக்கட்டை சுற்றி நின்று மக்கள் பாா்க்கும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைப்பதற்கான கால்கோள் நிகழ்ச்சி பள்ளி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது. பணிகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ்.சக்திகணேசன் துவக்கிவைத்தாா்.

ஜல்லிக்கட்டு குறித்து ஒருங்கிணைப்பாளா்கள் கூறியதாவது:

கடந்த ஆண்டைக் காட்டிலும் நிகழாண்டில் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன. பாா்வையாளா்கள் அமரும் இடம், பாதுகாப்பு வசதி மற்றும் வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறவுள்ளன என்றனா்.

விழாவில் ஜல்லிக்கட்டுப் பேரவைத் தலைவா் ஜி.மோகனராமகிருஷ்ணன், செயலாளா் டாக்டா் சி.ரகுநாத், பொருளாளா் டி.சக்தி விக்னேஷ் மற்றும் ஸ்பைஸ் ரவுண்ட் டேபிள் உறுப்பினா்கள், தன்னாா்வலா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com