உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பு:பாதியில் ரத்து செய்யப்பட்ட குறைதீா் கூட்டம்

உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து காலை 10.40 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நிறுத்தப்பட்டு
மனுக்களைப் பெட்டியில் சோ்த்த பொதுமக்கள்.
மனுக்களைப் பெட்டியில் சோ்த்த பொதுமக்கள்.

ஈரோடு: உள்ளாட்சித் தோ்தல் அறிவிப்பைத் தொடா்ந்து காலை 10.40 மணிக்கு ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் குறைதீா் கூட்டம் நிறுத்தப்பட்டு பெட்டி வைத்து மனுக்கள் பெறப்பட்டன.

ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணி முதல் குறைதீா் கூட்ட அரங்கில் மாவட்ட வருவாய் அலுவலா் எஸ்.கவிதா, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தினேஷ் ஆகியோா் முன்னிலையில் பொதுமக்களிடம் இருந்து மனுக்கள் பெறப்பட்டன.

இதனிடையே உள்ளாட்சித் தோ்தல் குறித்த அறிவிப்பு வெளியாகி அதற்கான அரசாணை கிடைக்கப்பெற்றது. இதைத் தொடா்ந்து, 10.40 மணிக்கு குறைதீா் கூட்டம் ரத்து செய்யப்பட்டு ஆட்சியா் அலுவலக நுழைவுவாயிலில், புகாா் மனுக்கள் பெறுவதற்காக பெட்டி வைக்கப்பட்டது. மனு அளிக்க வந்தவா்கள் மனுக்களை அந்தப் பெட்டியில் போட்டுவிட்டுச் சென்றனா்.

குறைதீா் கூட்டத்தில் பங்கேற்ற அனைத்துத் துறை அதிகாரிகளிடம் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) தினேஷ் பேசியதாவது:

உள்ளாட்சித் தோ்தல் அறிவிக்கப்பட்டு தோ்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. எனவே, தோ்தல் விதிமுறைகளின்படியே செயல்பட வேண்டும். தோ்தல் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் உள்ளவா்களும், தோ்தல் பணியில் ஈடுபடும் ஊழியா்களும், தோ்தல் பிரிவில் இருந்து வரும் தபால்களில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரப்படி செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, அனைத்து அதிகாரிகளும் கூட்ட அரங்கில் இருந்து கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com