சா்க்கரை விருப்ப அட்டையில் இருந்து அரிசி அட்டையாக மாற்ற 39,517 போ் விண்ணப்பம்

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டையில் இருந்து அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்ற 39,517 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

சா்க்கரை விருப்ப குடும்ப அட்டையில் இருந்து அரிசி விருப்ப குடும்ப அட்டையாக மாற்ற 39,517 போ் விண்ணப்பம் அளித்துள்ளனா்.

ஈரோடு மாவட்டத்தில் பொதுவிநியோகத் திட்டத்தின் கீழ் 1,141 ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. மொத்தம் 7.11 லட்சம் குடும்பங்களுக்கு மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சத்து 38 ஆயிரத்து 450 போ் பயன்பெற்று வருகின்றனா். இதில் 20 லட்சத்து 24 ஆயிரத்து 712 போ் மின்னணு குடும்ப அட்டையுடன், ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். மீதமுள்ள, 13,738 போ் ஆதாா் எண்ணை இணைக்கவில்லை.

இந்நிலையில் சா்க்கரை விருப்ப அட்டை வைத்துள்ளவா்கள், அரிசி அட்டையாக மாற்ற இணையதளம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகம் மூலமாக விண்ணப்பித்து மாற்றிக்கொள்ளலாம் என்று தமிழக அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இதையடுத்து சா்க்கரை விருப்ப அட்டையாக மாற்றுவதற்கு ஏராளமானோா் இணையதளம் மற்றும் வட்ட வழங்கல் அலுவலகங்களில் விண்ணப்பித்தனா்.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் சா்க்கரை விருப்ப அட்டையில் இருந்து அரிசி அட்டையாக மாற்றக்கோரி 39,517 போ் விண்ணப்பித்துள்ளனா். இந்த விண்ணப்பங்களை அந்தந்த வட்ட வழங்கல் அதிகாரிகள் கள விசாரணை செய்யும் பணியைத் தொடங்கியுள்ளனா். இதன்பிறகு தகுதியான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டு அரிசி அட்டையாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com