பவானி: பவானியை அடுத்த மைலம்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.06 கோடிக்கு எள் ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
இங்கு விற்பனைக்காக 1,373 மூட்டைகள் எள்ளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனா். வெள்ளை எள் கிலோவுக்கு குறைந்த விலையாக ரூ. 78.99 க்கும், அதிக விலையாக ரூ. 130.02 க்கும், கருப்பு எள் கிலோ ரூ. 108.89 முதல் ரூ. 118.89 க்கும் விற்பனையாயின. மொத்தம் 1026.95 குவிண்டால், ரூ. 1,06,63,338 க்கு ஏலம் போயின.