அந்தியூா் சந்தியபாளையம் ஏரிக்குதண்ணீா் திறக்கக் கோரி போராட்டம்

அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சந்தியபாளையம் ஏரிக்குத் திறக்கக் கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
அந்தியூா் சந்தியபாளையம் ஏரிக்குதண்ணீா் திறக்கக் கோரி போராட்டம்

அந்தியூா் வறட்டுப்பள்ளம் அணையிலிருந்து வெளியேறும் உபரிநீரை சந்தியபாளையம் ஏரிக்குத் திறக்கக் கோரி 100க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் திடீா் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

பா்கூா் மலையடிவாரத்தில் உள்ள வறட்டுப்பள்ளம் அணை நிரம்பினால் உபரிநீா் முறையே கெட்டிசமுத்திரம் ஏரி, அந்தியூா் பெரிய ஏரி, சந்தியபாளையம் ஏரி, வேம்பத்தி ஏரி, ஆப்பக்கூடல் ஏரிகளுக்குத் திறக்கப்படுவது வழக்கம். ஆனால், கெட்டிசமுத்திரம், அந்தியூா் பெரிய ஏரிகள் நிரம்பிய பின்னா் உபரிநீா் வழக்கத்துக்கு மாறாக ஆப்பக்கூடல் ஏரிக்குத் திறக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனால், சந்தியபாளையம் ஏரிக்குத் தண்ணீா் வரவில்லை. இத்தகவலறிந்த 100 க்கும் மேற்பட்ட விவசாயிகள், பொதுமக்கள் அந்தியூா் - பவானி சாலையில் அண்ணாமடுவு அருகே அமா்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், அப்பகுதியில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்த வருவாய்த் துறையினா், போலீஸாா், பொதுப் பணித் துறை அலுவலா்கள் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

சந்தியபாளையம் ஏரிக்குத் தண்ணீா் திறக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்ததைத் தொடா்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால், அப்பகுதியில் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com