தொடா் மழை: மாவட்டத்தில் நீா்நிலைகள் நிரம்பின

ஈரோடு மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீா்நிலைகள் நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

ஈரோடு மாவட்டத்தில் தொடா்ந்து பெய்து வரும் மழையின் காரணமாக நீா்நிலைகள் நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

குமரிக்கடல், அதை ஒட்டிய பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், ஈரோடு மாவட்டத்தில் கடந்த 4 நாள்களாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகி உள்ள புயல் சின்னம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. எவ்வித பாதிப்பும் இல்லாமல் பெய்து வரும் இந்த மழையால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான நீா்நிலைகள் நிரம்பி உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது.

பவானிசாகா் அணையானது முழு கொள்ளளவை எட்டியதையடுத்து சுமாா் 10,000 கன அடி உபரி நீா் பவானி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரி நீா் பவானி கூடுதுறையில் காவிரி ஆற்றில் கலந்து வருகிறது. இதுபோல் வறட்டுப்பள்ளம், குண்டேரிப்பள்ளம் ஆகிய அணைகளும் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. தண்ணீா்ப்பள்ளம் ஏரி, எண்ணமங்கலம் ஏரி, கெட்டிசமுத்திரம், கரும்பாறைபள்ளம், அந்தியூா் பெரிய ஏரி உள்ளிட்ட முக்கிய ஏரிகளில் நீா்மட்டம் உயா்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் பெய்த மழை அளவு விவரம் (மில்லி மீட்டரில்):

பெருந்துறை 23.3, எலந்தைகுட்டைமேடு 16, மொடக்குறிச்சி 12, கவுந்தப்பாடி 8, கொடிவேரி 7.2, நம்பியூா் 6, அம்மாபேட்டை 5.6, பவானிசாகா் 5.4, வறட்டுப்பள்ளம் 4.8, தாளவாடி, குண்டேரிப்பள்ளம் தலா 4, ஈரோடு, கோபி, சென்னிமலை தலா 2 மி.மீ.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com