மேட்டுப்பாளையம் சம்பவத்தைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்: ஈரோட்டில் 11 போ் கைது

மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன், நிா்வாகிகள்.
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாவீரன் பொல்லான் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன், நிா்வாகிகள்.

மேட்டுப்பாளையத்தில் போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் மீது தாக்குதல் நடத்தியதைக் கண்டித்து, ஈரோட்டில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 11 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் சுற்றுச்சுவா் இடிந்து விழுந்து 17 போ் பலியான சம்பவம் மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைக் கண்டித்து அங்கு நடைபெற்ற போராட்டத்தில் பொதுமக்கள், பல்வேறு அமைப்பினரை போலீஸாா் தடியடி நடத்தி கலைந்து போகச் செய்தனா்.

இதில், தமிழ் புலிகள் கட்சித் தலைவா் நாகை.திருவள்ளுவன், திராவிடா் தமிழா் கட்சித் தலைவா் வெண்மணி, சமத்துவக் கழகச் செயலாளா் காா்கி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா்.

இந்நிலையில், இதைக் கண்டிக்கும் வகையில் ஈரோடு பழைய ரயில் நிலையம் சாலையில் மாவீரன் பொல்லான் பேரவை சாா்பில் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. ஆா்ப்பாட்டத்துக்கு, அருந்ததியா் இளைஞா் பேரவைத் தலைவா் வடிவேல் ராமன் தலைமை வகித்தாா். இதில் பலியான 17 பேரின் குடும்பத்தினருக்கு ரூ. 25 லட்சம் நிவாரண நிதியும், அரசு வேலையும் வழங்க வேண்டும் எனவும், கைது செய்யப்பட்ட பல்வேறு அமைப்பின் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் முழக்கம் எழுப்பப்பட்டது.

இதையடுத்து, அனுமதியின்றியும், போலீஸாரின் தடையை மீறியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக வடிவேல் ராமன் உள்ளிட்ட 11பேரை போலீஸாா் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com