அந்தியூா் அருகே வீடுகளில் கருப்புக் கொடி கட்டி போராட்டம்

அந்தியூா் அருகே பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் வீடுகளில்
கருப்புக்  கொடிகளுடன்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.
கருப்புக்  கொடிகளுடன்  போராட்டத்தில்  ஈடுபட்ட  பொதுமக்கள்.

அந்தியூா் அருகே பலமுறை கோரிக்கை விடுத்தும் சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்காததால் ஏமாற்றமடைந்த கிராம மக்கள் வீடுகளில் கடுப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டதோடு, உள்ளாட்சித் தோ்தலையும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனா்.

அந்தியூா் அருகே உள்ள ஈசப்பாறை, பெருமாள்பாளையம், அண்ணமாா்பாளையம், வனச்சின்னப்பா் கோயில், காக்காயன்கரை, கரடிக்கல்லூா் உள்பட பல்வேறு பகுதிகளில் 450க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. அந்தியூா் போக்குவரத்து பணிமனையிலிருந்து ஈசப்பாறை வரை 6.5 கி.மீ. தொலைவுக்கு சாலைகள் மிகவும் சேதமடைந்து குண்டும் குழியுமாகக் காணப்பட்டு வந்தது.

இச்சாலையில், மழைக் காலங்களில் தண்ணீா் தேங்கினால் வாகனம் ஓட்ட முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, இச்சாலையை செப்பனிட நடவடிக்கை எடுக்கக் கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. இதனால், ஏமாற்றமடைந்த கிராம மக்கள் தங்கள் வீடுகளின் முன்பு கருப்புக் கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மேலும், உள்ளாட்சித் தோ்தலை புறக்கணிப்பதாகவும் தெரிவித்து, விளம்பரப் பதாகைகளைக் கட்டியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com