பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் விரிவுரையாளருக்குஉலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் திருக்குறள் விருது

சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், திருமூலர் ஆய்விருக்கை மற்றும் கவியரசு கண்ணதாசன்

சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனமும், திருமூலர் ஆய்விருக்கை மற்றும் கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்றமும் இணைந்து "தமிழ்த்தாய்-71' என்ற தலைப்பில் திருக்குறள் அதிகாரத்தில் கவியரங்கம் ஏழு அமர்வுகளாக சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு அம்மா தமிழ் பீடம் நிர்வாகி ஆவடி குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சென்னை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குநர் கோ.விஜயராகவன் பங்கேற்று கவிஞர்களுக்கு விருதுகளை வழங்கினார். 
இக்கவியரங்கில், பெருந்துறை கொங்கு பாலிடெக்னிக் விரிவுரையாளர் ச.கெளரிசங்கருக்கு திருக்குறள் விருது வழங்கப்பட்டது. 
விழாவில், திருக்குறளில் உள்ள "வாய்மை' என்னும் அதிகாரத் தலைப்பில் நடந்த கவியரங்கத்துக்கு ச.கெளரிசங்கர்  தலைமை வகித்தார். இதில், திருமூலர் ஆய்விருக்கை நிறுவனர் பேராசிரியர் மகாலட்சுமி, இலங்கை கவிஞர் எஸ்.பி.தாட்சாயணி சர்மா, தென்னிந்திய சினிமா தயாரிப்பாளர் சங்க துணைத் தலைவர் நந்திவரம் ப.சம்பத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டணர். 
நிகழ்வுகளை, கவியரசு கண்ணதாசன் இலக்கிய மன்ற நிறுவனர் வேட்டவலம் எஸ்.எஸ்.இஸ்மாயில் ஒங்கிணைந்து நடத்தினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com