தேசிய வாலிபால் போட்டிக்கு ஈரோடு பள்ளி மாணவர் தேர்வு
By DIN | Published On : 14th February 2019 07:40 AM | Last Updated : 14th February 2019 07:40 AM | அ+அ அ- |

தேசிய வாலிபால் போட்டிக்கு ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மாணவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
சென்னையில் அண்மையில் நடைபெற்ற தமிழ்நாடு சப்-ஜுனியர் வாலிபால் அணிக்கான தேர்வில் ஈரோடு பாரதி வித்யா பவன் பள்ளி மாணவர் பி. வருண்குமார் தமிழக அணிக்காக விளையாட தேர்வு பெற்றுள்ளார். இவர் ஒடிஸாவில் பிப்ரவரி 23 முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறவுள்ள தேசிய அளவிலான போட்டியில் விளையாட உள்ளார்.
இவரை பயிற்சியாளர்கள் எஸ். கிருஷ்ணமூர்த்தி, கே. ஆனந்தகுமார், பள்ளித் தாளாளர் டாக்டர் எல்.எம். இராமகிருஷ்ணன், தலைவர் அருணா இராமகிருஷ்ணன், முதல்வர்கள் பி. குருசடிசேவியர், ஆர். ஸ்ரீதர் ஆகியோர் வாழ்த்தினர்.