தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி மையத்தில்வேளாண் இணை இயக்குநர் ஆய்வு

கோபி வட்டாரத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்களை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வ.குணசேகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.

கோபி வட்டாரத்தில் செயல்பட்டுவரும் பல்வேறு திட்டங்களை ஈரோடு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் வ.குணசேகரன் புதன்கிழமை ஆய்வு செய்தார்.
கோபி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பல்வேறு பதிவேடுகளை ஆய்வு செய்தார் . பின் அரசால் வழங்கப்பட்டுள்ள இலக்குப்படி உடனடியாக நிதி செலவினம் மேற்கொள்ளுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கோபி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள தென்னை ஒட்டுண்ணி உற்பத்தி  மையம் மற்றும் செல்லப்பா நகரில் உள்ள கரும்பு ஒட்டுண்ணி மையம் ஆகியவற்றைப் பார்வையிட்ட அவர் விவசாயிகளின் தேவைக்கேற்ப ஒட்டுண்ணி உற்பத்தியை மேலும் அதிகரிக்க ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து, கொளப்பலூரில் சனகரத்தினம் என்பவரது வயலில் தெளிப்பு நீர்ப்பாசனம் மூலம் 2 ஏக்கரில் அமைக்கப்பட்டிருந்த தரணி என்ற புதிய ரக நிலக்கடலை விதைப்பண்ணையை பார்வையிட்டு பூச்சி நோய் தாக்குதல் குறித்தும், வறட்சிக் காலத்தில் பயிர் பராமரிப்பு செய்வது குறித்தும் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். ஆய்வின்போது, கோபி வேளாண்மை உதவி இயக்குநர் அ.நே.ஆசைத்தம்பி, வேளாண்மை அலுவலர்கள் சந்திரசேகரன், பவானி மற்றும் கள அலுவலர்கள் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com