கள்ளுக்கு அனுமதி அளிக்கக் கோரிக்கை

நீரா பானத்துக்கு அனுமதி அளித்ததைப்போல கள் இறக்கவும் அனுமதி அளித்து காவல் துறையினரின்


நீரா பானத்துக்கு அனுமதி அளித்ததைப்போல கள் இறக்கவும் அனுமதி அளித்து காவல் துறையினரின் நடவடிக்கையிலிருந்து பாதுகாக்க வேண்டும் என கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அச்சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ஏ.பொன்னுசாமி சனிக்கிழமை அளித்துள்ள மனு:
கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் 2009 ஜனவரி 21 ஆம் தேதி கள்ளுக்கடைக்கான தடையை நீக்கக் கோரி முதல்வரிடம் மனு அளித்தபோது, நீரா பானம் இறக்குவதற்கு அனுமதி அளித்தார். திமுக ஆட்சியில் கள்ளுக்கான சிவசுப்பிரமணியன் கமிஷனை அமைத்தார். இதைத் தொடர்ந்து, ஜெயலலிதா கடந்த 2011 இல் தேர்தல் பிரசாரம் செய்தபோது பொள்ளாச்சியில் நடைபெற்ற கூட்டத்தில், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கள் இறக்க அனுமதி வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
நீராவும், கள்ளும் தென்னை மரத்தில் ஒரே தன்மையில்தான் இறக்கப்படுகிறது. அதில், நீரா என்பது இனிப்பாகவும், ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பாக மாறி கள்ளின் தன்மையை அடைகிறது. இதில், விவசாயிகள் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. ஆனால், இயற்கையாக மாறும் செயலுக்கு காவல் துறையினர் எங்கள் மீது நடவடிக்கை எடுக்கின்றனர். தமிழக அரசு நீராவுக்கு அனுமதி வழங்கிவிட்டு கள்ளுக்கு அனுமதி வழங்காமல் இருக்கின்றனர். ஆனால், கேரளத்தில் கள்ளுக்கு அனுமதி உள்ளதால்தான், நீராவுக்கு அனுமதி அளித்திருக்கிறார்கள். அதேபோல, தமிழக விவசாயிகளுக்கும் அனுமதி வழங்க வேண்டும் என்பதே எங்களின் நீண்டநாள் கோரிக்கை. தற்போது நீரா இறக்கிக் கொண்டிருக்கும் எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதை காவல் துறை நிறுத்த வேண்டும் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com