பவானியில் புனித மரியன்னை ஆலயம் அர்ச்சிப்பு பெருவிழா

பவானி, அண்ணா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட புனித மரியன்னை ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 

பவானி, அண்ணா நகரில் புதிதாகக் கட்டப்பட்ட புனித மரியன்னை ஆலயத்தின் அர்ச்சிப்பு பெருவிழா புதன்கிழமை நடைபெற்றது. 
1966 ஆம் ஆண்டு இங்கு கட்டப்பட்ட ஆலயத்தைப் புதுப்பிக்க ஆலய நிர்வாகிகள் முடிவு செய்து, கட்டுமானப் பணியில் ஈடுபட்டு வந்தனர். 
ஆலயத்தின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து,  ஆலயத்தின் அர்ச்சிப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றது. ஆலயத்தின் ஆயர் பாஸ்கல் ஜெகன்ராஜ் வரவேற்றார். 
உதகை மறைமாவட்ட ஆயர் ஏ.அமல்ராஜ் தலைமையில் கும்ப ஆரத்தி, புதிய ஆலயத்தின் வழிபாட்டுக்கு பயன்படும் புதிய பொருள்களைப் புனிதம் செய்தல், கொடிமரம் புனிதம் செய்து கொடியேற்றுதல், ஆலயத்தை ஒப்புக்கொடுத்து, கதவு திறக்கும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து, உலக அமைதி வேண்டி புறாக்கள் பறக்கவிடப்பட்டன. 
 மறைமாவட்ட ஆயர்கள் தன்ராஜ் (கோவை), இருதயசெல்வம் (சேலம்), ஆரோக்கிய பாஸ்கர் (தஞ்சை), வட்டார ஆயர்கள் மரிய ஜோசப் (சத்தி),  அந்தோணிராஜ் (தாளவாடி), ஞானதாஸ் (குன்னூர்) ஆகியோர் வழிபாடுகளை நடத்தினர்.
ஆலய பீடம் அர்ச்சிப்பு, திருப்பண்டம் பதித்தல், திருத்தைலம் பூசுதல், தூபமிடுதல், காணிக்கை மற்றும்  நற்கருணை பேழையை பதப்படுத்துதல், திருச்சிலுவை,   திருவுருவங்கள் புனிதம் செய்தல்,   சிலுவைப்பாதை நிலை புனிதம் செய்தல் உள்ளிட்ட வழிபாடுகளும் செய்யப்பட்டன.  உதகை மறை மாவட்டப் பொருளாளர் செல்வநாதன், பங்கு பேரவை துணைத் தலைவர் டி.ரவி, பவானி காவல் துணைக் கண்காணிப்பாளர் டி.சார்லஸ், கிரேஸ் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.மதலைமுத்து, செயலர் எம்.வின்சென்ட் அமல்ராஜ், கிரேஸ் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியை எம்.சசி கிளாரா உள்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com