பால் உற்பத்தியாளர்களுக்கு ரூ. 3.11 லட்சம் ஊக்கத் தொகை

பவானி அருகே உள்ள மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 147 பேருக்கு ரூ. 3.11 லட்சம் ஊக்கத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது. 

பவானி அருகே உள்ள மயிலம்பாடி பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் 147 பேருக்கு ரூ. 3.11 லட்சம் ஊக்கத் தொகை புதன்கிழமை வழங்கப்பட்டது. 
இந்நிகழ்ச்சிக்கு, சங்கத் தலைவர் பி.குப்புசாமி தலைமை வகித்தார். ஆவின் பொது மேலாளர் வே.லதா, பவானி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் என்.கிருஷ்ணராஜ் முன்னிலை வகித்தார். சங்கச் செயலாளர் ஆர்.மாதேஸ்வரன் வரவேற்றார். சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன், சங்க உறுப்பினர்கள் 147 பேருக்கு ஊக்கத் தொகை, பங்கு ஈவுத்தொகை சேர்த்து ரூ. 3.11 லட்சத்தை வழங்கினார்.
இதில், ஆவின் துணைப் பொது மேலாளர் கே.வெங்கடாசலம், குழுத் தலைவர் எஸ்.சண்முகம், மயிலம்பாடி சிற்றூராட்சி முன்னாள் தலைவர் ஏ.டி.சண்முகம், பவானி கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத் தலைவர் பெரியசாமி, பால் பரிசோதகர் எஸ்.வெங்கடேஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com