ஜூன் 15 மின் தடை

கொடுமுடி, நடுப்பாளையம், கஸ்பாபேட்டைஈரோடு, ஜூன் 13: ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட

கொடுமுடி, நடுப்பாளையம், கஸ்பாபேட்டை
ஈரோடு, ஜூன் 13: ஈரோடு தெற்கு கோட்டத்துக்கு உள்பட்ட கொடுமுடி, நடுப்பாளையம், கஸ்பாபேட்டை துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன்15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.
 கொடுமுடி துணை மின் நிலையம்- கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசாம்பாளையம், ஒத்தக்கடை, ஊஞ்சலூர், பிலிக்கல்பாளையம்,  தாமரைப்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், வடக்கு புதுப்பாளையம், சோளக்காளிபாளையம் மற்றும் நாகமநாயக்கன்பாளையம் பகுதிகள். 
நடுப்பாளையம் துணை மின் நிலையம்- நடுப்பாளையம்,  கொம்பனைப்புதூர், மலையம்பாளையம், கொளாநல்லி, பி.கே.மங்களம், ஈஞ்சம்பள்ளி, கருமாண்டாம்பாளையம், சோளங்காபாளையம், பாசூர், எம்.கே.புதூர், ஆர்.என்.பாளையம், கொளத்துப்பாளையம், செம்மாண்டாம்பாளையம், பி.கே.பாளையம் மற்றும் குட்டப்பாளையம் பகுதிகள்.
கஸ்பாபேட்டை துணை மின் நிலையம்- கஸ்பாபேட்டை, முள்ளாம்பரப்பு, சின்னியம்பாளையம், குளூர், மொடக்குறிச்சி, பூந்துறைசேமூர், வீரப்பம்பாளையம், வெண்டிபாளையம், 46புதூர், ரங்கம்பாளையம், குறிக்காரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவிந்தநாய்க்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, செங்கராபாளையம், டி.மேட்டுபாளையம், ஆணைக்கல்பாளையம், இ.பி.நகர், டெலிபோன் நகர், பாரதி நகர், மூலப்பாளையம், செட்டிபாளையம், சடையம்பாளையம், லக்காபுரம், நகராட்சி நகர், கருந்தேவன்பாளையம், சாவடிபாளையம், சோலார், ரகுபதிநாயக்கன்பாளையம், கிளியம்பட்டி, காக்கத்தான்வலசு பகுதிகள்.
இத்தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் சா.முத்துவேல் தெரிவித்துள்ளார்.


ஈரோடு நகர், காசிபாளையம்
ஈரோடு நகர், காசிபாளையம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் காரணமாக இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன்15) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என ஈரோடு நகரிய கோட்ட செயற்பொறியாளர் கோ.வா.பழனிவேல் தெரிவித்துள்ளார். 
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஈரோடு நகர், சூரம்பட்டி வலசு, வீரப்பன்சத்திரம், இடையன்காட்டு வலசு, முனிசிபல் காலனி, ஆசிரியர் காலனி, பெருந்துறை சாலை, சம்பத் நகர், வெட்டுக்காட்டு வலசு, மாணிக்கம்பாளையம், பெரியவலசு, கருங்கல்பாளையம், நாராயணவலசு, குமலன்குட்டை, கே.கே.நகர், சென்னிமலை சாலை, தொழில்பேட்டை பகுதிகள். 
 காசிபாளையம், சாஸ்திரி நகர், குமரன் நகர், ஜீவா நகர், மூலப்பாளையம், நாடார் மேடு, கொல்லம்பாளையம், பச்சப்பாளி, செந்தில் நகர், எம்.ஜி.பாளையம், கொல்லம்பாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு, வெண்டிபாளையம், டவர்லைன் காலனி, திருமால் நகர், அசோகபுரம், வைராபாளையம், மூலப்பட்டறை, பெரியார் நகர், சக்தி நகர், கே.என்.கே.சாலை, நேதாஜி சாலை, காந்திஜி சாலை, ஈ.வி.என்.சாலை, மேட்டூர் சாலை, முத்தம்பாளையம் வீட்டுவசதி வாரியக் குடியிருப்பு பகுதி 1, 2, 3, அம்பிகை நகர், அன்னை நகர், நல்லியம்பாளையம், பழைய ரயில் நிலையம் ஆகிய பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com