பெருந்துறையில் காவல் உதவி ஆய்வாளர்களுக்கான 9 வார பயிற்சி துவக்கம்
By DIN | Published On : 25th June 2019 05:59 AM | Last Updated : 25th June 2019 05:59 AM | அ+அ அ- |

ஈரோடு, கோவை, திருப்பூர், உதகை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த காவல் சிறப்பு உதவி ஆய்வாளர்கள்( எஸ்.எஸ்.ஐ.,) 98 பேருக்கான பதவி உயர்வுக்கான (எஸ்.ஐ.) பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை தொடங்கியது.
பெருந்துறை, கொங்கு பொறியியல் கல்லூரி வளாகத்தில் இப்பயிற்சி வகுப்புகள் ஒன்பது வாரம் நடக்கின்றன.
1988 இல் பணியில் சேர்ந்து தற்போது சிறப்பு உதவி ஆய்வாளர்களாக (எஸ்.எஸ்.ஐ.,) பணியாற்றும் 98 பேர் உதவி ஆய்வாளர்களாக (எஸ்.ஐ.,) பதவி உயர்வு பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், பெண் எஸ்.எஸ்.ஐ. ஒருவர் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.