14 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.11.85 கோடியில் குடிநீர் திட்டப் பணிகள்

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.11.85 கோடியில் 503 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். 

ஈரோடு மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்களில் ரூ.11.85 கோடியில் 503 குடிநீர் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் தெரிவித்துள்ளார். 
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஈரோடு மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த 225 கிராம ஊராட்சிகளில் வசிக்கும் பொதுமக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 14 வது நிதி குழு மானியத்தின் கீழ் கடந்த ஜனவரி 1 ஆம் தேதி முதல் ரூ.2.81 கோடி மதிப்பில் 168 பணிகளும், மாவட்ட ஊராட்சி பொது நிதியின் கீழ் ரூ.2.78 கோடி மதிப்பில் 74 பணிகளும், சட்டப் பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.23.25 லட்சம் மதிப்பில் 12 பணிகளும், ஊராட்சி ஒன்றிய பொது நிதியின் கீழ் ரூ.4.61 கோடி மதிப்பில் 156 பணிகளும், தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.6.2 லட்சம் மதிப்பில் 3 பணிகள் மற்றும் உபரி நிதியின் கீழ் ரூ.1.35 கோடி மதிப்பில் 90 பணிகளும் நடைபெற்று வருகின்றன. பொதுமக்களின் குடிநீர்த் தேவையைக் கருத்தில் கொண்டு 225 கிராம ஊராட்சிகளில் உள்ள 3,199 குக்கிராமங்களில் வசிக்கும் மக்களின் குடிநீர்த் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் போர்கால அடிப்படையில் கடந்த 6 மாதங்களில் ரூ.11.85 கோடி மதிப்பீட்டில் 503 பணிகள் தொடங்கப்பட்டதில், 384 பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டுள்ளன. 
மீதமுள்ள 119 பணிகள் ஒரு வார காலத்தில் முடிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com