ஈரோட்டில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐயினர் 12 பேர் கைது

ஈரோட்டில் காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள்

ஈரோட்டில் காவல் துறையினரின் அனுமதி இல்லாமல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எஸ்டிபிஐ கட்சி நிர்வாகிகள் 12 பேரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர். 
தமிழகத்தில் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம், 8 வழிச்சாலை திட்டம், விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரங்கள் அமைத்தல், எரிவாயு குழாய் பதித்தல் போன்ற திட்டங்களை கைவிடக் கோரி எஸ்டிபிஐ கட்சி சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு, காவல் துறையினர் அனுமதி வழங்கவில்லை.
இதையடுத்து, அக்கட்சியின் மாவட்டப் பொதுச் செயலர் முகமது லுக்மானுல் ஹக்கீம் தலைமையில் கட்சியினர் ஈரோடு கருங்கல்பாளையம் காந்தி சிலை பகுதியில் திரண்டனர். மாவட்ட துணைத் தலைவர் குறிஞ்சி பாட்ஷா, மாவட்டச் செயலர் முகமது அகில், மாவட்ட ஊடகப் பொறுப்பாளர் சபீர் அகமது, பவானி தொகுதி தலைவர் தர்வேஸ் மைதீன் மற்றும் கட்சியினர் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். அப்போது, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கருங்கல்பாளையம் போலீஸார் அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் 12 பேரைக் கைது செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com