வேளாளர் பொறியியல் கல்லூரியில் தொழில்நுட்பக் கண்காட்சி
By DIN | Published On : 04th March 2019 07:17 AM | Last Updated : 04th March 2019 07:17 AM | அ+அ அ- |

வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பொறியியல் கண்டுபிடிப்புகளின் புராஜெக்ட் எக்ஸ்போ 2019 கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.
கண்காட்சிக்கு கல்லூரித் தாளாளர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். கர்நாடக மாநிலம், பெல்லாரியைச் சேர்ந்த ஜெ.எஸ்.டபிள்யூ அமைப்பின் துணைப் பொது மேலாளர் எஸ்.கார்த்திகேயன் கண்காட்சியைத் தொடங்கிவைத்தார். கல்லூரி முதல்வர் எம்.ஜெயராமன் வரவேற்றார்.
பல்வேறு துறைகளில் இருந்து 407 பொறியியல் மற்றும் தொழில்நுட்ப வடிவமைப்புகள் இடம்பெற்றிருந்தன. தொழில்நுட்பக் கண்காட்சி குறித்த மலர் வெளியிடப்பட்டது. இதில் புல முதல்வர்கள் ஐ.பீட்டர் ஸ்டான்லி பெபிங்டன், பி.ஜெயசந்தர், துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.