கருங்கல்பாளையம் சந்தை: ரூ.4 கோடிக்கு மாடுகள் விற்பனை

கருங்கல்பாளையம் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை  அதிகளவில் இருந்ததால் ரூ. 4 கோடி அளவுக்கு மாடுகள் விற்பனையானது. 

கருங்கல்பாளையம் சந்தையில் வெளிமாநில வியாபாரிகள் வருகை  அதிகளவில் இருந்ததால் ரூ. 4 கோடி அளவுக்கு மாடுகள் விற்பனையானது. 
 ஈரோடு, கருங்கல்பாளையம் காவிரிக்கரை சோதனைச் சாவடி அருகே மாட்டுச் சந்தை வியாழக்கிழமை கூடியது. ஈரோடு மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளும், வெளி மாநில வியாபாரிகளும் திரண்டிருந்தனர். இதனால் மாடுகள் விற்பனை களைகட்டியது. 
  இதுகுறித்து, மாட்டுச்சந்தை மேலாளர் முருகன் கூறியதாவது: 
திருப்பூர் மாவட்டம்,  தாராபுரம்,  அவிநாசி சுற்று வட்டாரப்பகுதிகளில்  கள்ளச்சாராயம், கஞ்சா விற்ற வழக்குகளில் தண்டனை அனுபவித்த 57 பேர் திருந்தி வாழ்வதாகக் கூறியதன்பேரில் அவர்களின் மறுவாழ்வுக்காக பசுமாடு வழங்குவதற்காக, அதிகாரிகள் வந்து 57 மாடுகளை வாங்கிச்சென்றனர்.  வழக்கம்போல் இந்த வாரம் மாடுகள் வரத்தும் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் வருகையும் அதிகமாக இருந்தது. இந்த வாரச் சந்தையில், 400 பசுக்கள், 300 எருமைகள், 250 வளர்ப்புக்கன்றுகள் விற்பனைக்காக வந்திருந்தன. பசுக்கள் ரூ.16,000 முதல் ரூ.32,000 வரையிலும், எருமைகள் ரூ.18,000 முதல் ரூ.36,000 வரையிலும் விற்பனை ஆனது. வளர்ப்புக் கன்றுகள் ரூ.2,000 முதல் ரூ.12,000 வரையிலும் விற்பனையானது. மொத்தம் சுமார் ரூ.4 கோடிக்கு மாடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com