பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி ஏற்பு

பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 


பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மக்களவை தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்த உறுதிமொழி எடுக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. 
நிகழ்ச்சிக்கு பெருந்துறை மருத்துவக் கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். பெருந்துறை வட்டாட்சியர் அலுவலக தலைமயிடத்து துணை வட்டாட்சியர் பரமசிவன் பங்கேற்று உறுதிமொழியை வாசித்தார். 
கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள், பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துக் கொண்டு, வாக்களிப்பதில் ஒவ்வொரு இந்திய குடிமகனும் பெருமை கொள்ள வேண்டும். 
எதிர்காலம் ஏற்றம் பெற வலுவான ஜனநாயகத்தை உருவாக்க பணமோ, பரிசுப் பொருள்களோ பெறாமல், நம் நாட்டை ஆள்பவரை தேர்ந்தெடுக்க நமக்கு இருக்கும் கடமையையும், உரிமையையும் பயன்படுத்தி ஒவ்வொருவரும் அவசியம் வாக்களிப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.  
இதில், கல்லூரி துணை முதல்வர் ஏ.சந்திரபோஸ், மருத்துவமனை துணை காண்காணிப்பாளர் எஸ். செந்தில்குமார், உறைவிட மருத்துவ அலுவலர் வி.மோகன்குமார் உள்பட பலர் கலந்துக் கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com