பொள்ளாச்சி விவகாரம்: கோபியில் மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக கோபியில் அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

பொள்ளாச்சி விவகாரம் தொடர்பாக கோபியில் அகில இந்திய மாணவர்கள் சங்கத்தினர் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பவானி, அந்தியூர், ஈரோடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவியர்கள் ஒன்று கூடி கோபி பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை வந்தனர். 
 அப்போது, போராட்டத்துக்கு அனுமதியில்லை எனக் கூறி கோபி போலீஸார் மாணவர்களை போராட்டத்தில் ஈடுபட அனுமதிக்காமல் திருப்பி அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆனால், மாணவர்கள் திருப்பூர் பேருந்துகள் நிறுத்தத்தில் இருந்து கோபி பேருந்து நிலையத்துக்குள் ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் முகப்பு பகுதியில் நின்று கோஷங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தின் போது தஞ்சை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்.
 பொள்ளாச்சி கூட்டுப் பாலியியல் வன்கொடுமையில் ஈடுபட்ட குற்றவாளிகள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு கடுமையான தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர். 
இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட கல்லூரி மாணவ, மாணவிகளை கோபிசெட்டிபாளையம் போலீஸார் கைது செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com