பெண் போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு: மே 26 முதல் அமல்

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கும் திட்டம் மே 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் பணியாற்றும் பெண் போலீஸாருக்கு வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கும் திட்டம் மே 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது.
இது குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திகணேஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
ஈரோடு மாவட்ட காவல் துறையில் பெண்கள் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் முதல் இரண்டாம் நிலை காவலர்கள் வரை 311 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் ஒரு ஏடிஎஸ்பி.,  2 டிஎஸ்பி, 8 ஆய்வாளர்கள், 18  உதவி ஆய்வாளர்கள், 282 போலீஸார் (சட்டம் -ஒழுங்குப் பிரிவில் 211, ஆயுதப்படை பிரிவில் 70) உள்ளனர்.
ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவல் அலுவலர்கள் தங்களது குடும்பத்தைப் பராமரிக்கவும், அவர்களின்  உடல் நலத்தைப் பாதுகாக்கவும், துறையில் சிறப்பாகப் பணியாற்றிடவும், பெண் உதவி ஆய்வாளர்கள் முதல் இரண்டாம் நிலை போலீஸார் வரை உள்ளவர்களுக்கு வாரத்தில் ஒரு நாள் விடுப்பு என மாதத்தில் ஒவ்வொருவருக்கும் 4 நாள்களுக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. 
காவல் துறையின் அன்றாடப் பணிகள் எவ்விதத்திலும் பாதிக்காதவாறு விடுப்பு வழங்கப்பட உள்ளது. இத்திட்டம் மே 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படவுள்ளது. வாரத்தில் ஒரு நாள் ஓய்வு கொடுத்தால் பெண் அலுவலர்கள் தங்களது குழந்தைகளுடனும், குடும்பத்துடனும் வீட்டில் அதிக நேரம் செலவிட்டு, மன நிறைவுடன் இருந்தால் வாரத்தின் இதர நாள்களில் அவர்கள் பணியில் சிறப்பாகப் பணியாற்ற ஏதுவாக இருக்கும் என்ற அடிப்படையில் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. 
 அதன்படி ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை ஆகிய நாள்களில் தலா 45 பேர்,  வியாழக்கிழமை 43 பேர், வெள்ளிக்கிழமை 42 பேர், சனிக்கிழமை 35 பேர் என மொத்தம் 300 பேருக்கு சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்படவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com