தபால் வாக்குப் பெட்டி எடுத்து செல்லும் நடைமுறையில் மாற்றம்

தபால் வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளிலேயே வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு

தபால் வாக்குப் பெட்டிகள், வாக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாளிலேயே வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
தேர்தல் பணியில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் வாக்களிக்க வசதியாக தபால் ஓட்டுப் படிவங்கள் வழங்கப்பட்டன. இதனையடுத்து அரசு ஊழியர்கள் தங்களது வாக்குச் சீட்டு படிவங்களைத் தபால் மூலம் அனுப்பி வருகின்றனர். 
ஒவ்வோர் நாளும் வரும் தபால் வாக்குகள் ஆட்சியர் அலுவலகங்களில் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் வேட்பாளர் பிரதிநிதிகளின் முன்னிலையில் தபால் வாக்கு பெட்டியில் போடப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. கடந்த தேர்தலில் தபால் வாக்கு பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை நாளன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்வது வழக்கமான நடைமுறை. 
ஆனால் இந்த தேர்தலில் முன்கூட்டியே அதாவது 22 ஆம் தேதி மாலை ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காவல் துறை பாதுகாப்புடன் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 
மின்னணு வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவாகி உள்ள வாக்குகளை எண்ண தொடங்குவதற்கு முன்பாகவே தபால் ஓட்டுகள் எண்ணப்பட உள்ளதாலும், தபால் ஓட்டுப் படிவங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டியுள்ளதாலும் தேர்தல் ஆணையம் இந்த மாற்றத்தை கொண்டு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com