பண்ணாரி அம்மன் கோயிலில் தீத் தடுப்பு ஒத்திகை
By DIN | Published On : 18th May 2019 06:36 AM | Last Updated : 18th May 2019 06:36 AM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ள பண்ணாரி அம்மன் கோயிலில் தீத் தடுப்பு ஒத்திகை வியாழக்கிழமை நடைபெற்றது.
சத்தியமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் விஜயகுமார் மற்றும் தீயணைப்பு படை வீரர்கள் இந்த ஒத்திகையில் கலந்துகொண்டு தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பது எப்படி, தீயணைப்புக் கருவிகளை இயக்குவது மற்றும் தீக் காயம் ஏற்பட்டவர்களை மீட்பது குறித்த பண்ணாரி அம்மன் திருக்கோயில் பணியாளர்களுக்குப் பயிற்சி அளித்தனர்.
பின்னர் கோயில் வளாகத்தில் தீ விபத்து ஏற்பட்டால் அணைப்பது குறித்து செயல் விளக்கம் செய்து காட்டினர். இந்நிகழ்ச்சியில், பண்ணாரி அம்மன் கோயில் துணை ஆணையர் பழனிகுமார், திருக்கோயில் பணியாளர்கள் மற்றும் பரம்பரை அறங்காவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.