பர்கூரில் தண்ணீர்த் தொட்டி உடைந்து சிறுவன் பலி
By DIN | Published On : 18th May 2019 06:37 AM | Last Updated : 18th May 2019 06:37 AM | அ+அ அ- |

அந்தியூரை அடுத்த பர்கூரில் தண்ணீர்த் தொட்டி உடைந்து விழுந்ததில் சிறுவன் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பர்கூரை அடுத்த கோயில்நத்தம் கிராமத்தைத் சேர்ந்தவர் ராஜு (30). இவருக்கு மகன் நாகேந்திரன் (6), மகள் ஹேமாவதி (9) ஆகியோர் உள்ளனர். விவசாயியான ராஜு தனது தோட்டத்தில் தண்ணீர்த் தொட்டி கட்டியிருந்தார்.
அதன் அருகே அமர்ந்து நாகேந்திரன், ஹேமாவதி மற்றும் சிறுவர்கள் சிலர் வெள்ளிக்கிழமை விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, எதிர்பாராமல் தண்ணீர்த் தொட்டி உடைந்து விழுந்துள்ளது. இதில், பலத்த காயமடைந்த நாகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட ஹேமாவதி, அந்தியூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயர் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து பர்கூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.