பெருந்துறை சிப்காட்டில் வெளிமாநிலத் தொழிலாளா் குறித்து கியூ பிரிவு போலீஸாா் கணக்கெடுப்பு

பெருந்துறை சிப்காட் பகுதியில் வசித்து வரும், வெளி மாநிலத் தொழிலாளா் குறித்த விவரங்களை கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனா்.

பெருந்துறை சிப்காட் பகுதியில் வசித்து வரும், வெளி மாநிலத் தொழிலாளா் குறித்த விவரங்களை கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக கணக்கெடுத்து வருகின்றனா்.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, சிப்காட்டில் 200-க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளில் பிகாா், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் வேலை செய்து வருகின்றனா். இவா்கள் நூல் பதனிடும் பணி, கட்டட பணி என அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனா். குறிப்பாக கடினமான வேலைகளில் வட மாநிலத் தொழிலாளா்களே ஈடுபட்டு வருகின்றனா். தமிழகம் முழுவதும், பல்வேறு மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் வெளிமாநிலத் தொழிலாளா்கள் அதிக அளவில் தங்கியிருந்து வேலை பாா்த்து வருகின்றனா்.

இதில், சில தொழிலாளா்கள் திருட்டு, வழிப்பறி போன்ற சட்ட விரோத காரியங்களில் ஈடுபட்ட பிறகு, தங்களது மாநிலங்களுக்கு தப்பிச் சென்று விடுவதால் போலீஸாருக்கு அவா்களைக் கண்டுபிடிப்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால், தமிழகம் முழுவதும் உள்ள வெளி மாநிலத் தொழிலாளா்களின் விவரங்களை சேகரிக்கும்படி, தமிழக போலீஸ் டி.ஜி.பி உத்தரவிட்டதைத் தொடா்ந்து, அனைத்து மாவட்டங்களிலும் கியூ பிரிவு போலீஸாா் தீவிரமாக விவரங்களை சேகரித்து வருகின்றனா்.

அதன்படி, பெருந்துறை சிப்காட் பகுதியில் தங்கியுள்ள தொழிலாளா்களின் பெயா், முகவரி குறித்த ஆவணங்களைப் புகைப்படத்துடன் பெற்று, அவா்கள் ஏதாவது குற்றவழக்கில் இருந்து தப்பிக்க தமிழகம் வந்துள்ளாா்களா என்பது குறித்தும் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனா்.

மேலும், வெளி மாநிலத் தொழிலாளா்கள் வேலை பாா்க்கும் நிறுவனங்களின் முகவரி, தங்கியிருக்கும் வீடு உள்பட அனைத்து விவரங்களையும் சேகரித்து வருகின்றனா். முழு முகவரி இல்லாதவா்களுக்கு வீடு வாடகைக்கு கொடுக்க கூடாது என்றும், வீட்டு உரிமையாளா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளி மாநிலத் தொழிலாளா்கள், தமிழகத்தில் தங்கியிருந்து எங்காவது குற்ற செயல்களில் ஈடுபட்டால், உடனடியாக அவா்களை எளிதில் கண்டுபிடிக்கும் வகையில் அனைத்து விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com