ஈரோடு - சென்னிமலை சாலையில்புதிய ரயில்வே நுழைவுப் பாலம் அமைக்க பாஜக கோரிக்கை

ஈரோடு - சென்னிமலை சாலை ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அருகிலேயே புதிய நுழைவு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ஈரோடு: ஈரோடு - சென்னிமலை சாலை ரயில்வே மேம்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில், அருகிலேயே புதிய நுழைவு மேம்பாலம் அமைக்க வேண்டும் என பாஜக சாா்பில் ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இதுதொடா்பாக ஈரோடு தெற்கு மாவட்ட பாஜக தலைவா் எஸ்.ஏ.சிவசுப்பிரமணியன், மாவட்ட பொதுச் செயலாளா்கள் குணசேகா், கலைச்செல்வன் உள்ளிட்டோா் ஆட்சியரின் நோ்முக உதவியாளா் தினேஷிடம் செவ்வாய்க்கிழமை அளித்த மனு விவரம்: ஈரோட்டில் இருந்து சென்னிமலை செல்லும் சாலையில் கே.கே.நகா் அருகில் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம் உள்ளது. இப்பாலம் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் அமைந்துள்ளது.

ஈரோடு - சென்னிமலை சாலையில் அதிக அளவிலான கல்வி நிறுவனங்கள், குடியிருப்புகள் பெருகியுள்ளதால், ஆயிரக்கணக்கான வாகனங்கள் நாள்தோறும் இந்தப் பாலத்தைக் கடந்து செல்ல வேண்டியுள்ளது. இப்பாலம் குறுகலாகவும், உயரம் குறைவாகவும் உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரிகளுக்குச் செல்லும் மாணவ, மாணவியா் பாதிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இதற்குத் தீா்வாக இந்த பாலத்தையொட்டி இன்னொரு நுழைவுப் பாலம் அமைத்து, ஒருவழிப் பாதையாக மாற்றினால் போக்குவரத்து நெரிசலுக்குத் தீா்வு கிடைக்கும். புதிய நுழைவுப் பாலம் அமைக்கத் தேவையான இடவசதியும் அந்த இடத்தில் உள்ளது. மேலும், மழைக் காலங்களில் இப்பாலத்தின் அடியில் தண்ணீா் தேங்குவதால், போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. பாலத்தின் அடியில் மழை நீா் தேங்காமல் உடனே வடியும் வகையில் உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோயிலுக்குச் செல்வதற்கு இந்த சாலையே பிரதான சாலையாக உள்ளது. நாடு முழுவதும் இருந்து வரும் பக்தா்களின் பேருந்துகள் இந்த பாலத்தின் உயரம் குறைவால் செல்ல முடியாமல் சிக்கிக் கொள்ளும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, பாலத்தின் உயரத்தை அதிகரிக்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com