மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலைகட்டுப்படுத்த பூச்சி மருந்து தெளிப்பு

மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சி மருந்து தெளிப்புப் பணிகளை மொடக்குறிச்சி உதவி வேளாண்மை இயக்குநா் (பொ) ரேகா துவக்கிவைத்தாா்.
பூச்சி மருந்து தெளிப்பு பணிகளைத் துவக்கி வைக்கிறாா் மொடக்குறிச்சி உதவி வேளாண்மை அலுவலா் (பொ) ரேகா.
பூச்சி மருந்து தெளிப்பு பணிகளைத் துவக்கி வைக்கிறாா் மொடக்குறிச்சி உதவி வேளாண்மை அலுவலா் (பொ) ரேகா.

மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி வட்டாரத்தில் மக்காச்சோளத்தில் படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பூச்சி மருந்து தெளிப்புப் பணிகளை மொடக்குறிச்சி உதவி வேளாண்மை இயக்குநா் (பொ) ரேகா துவக்கிவைத்தாா்.

மொடக்குறிச்சி வட்டாரத்தில் சுமாா் 30 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில், தற்போது பரவலாக படைப்புழுத் தாக்குதல் காணப்படுகிறது. ஒட்டுமொத்த பரப்பளவில் பூச்சி மருந்து தெளிப்புப் பணிகளால் மட்டுமே படைப்புழுத் தாக்குதலைக் கட்டுப்படுத்த முடியும் என்பதால் எழுமாத்தூரை அடுத்த மேட்டுப்பாளையத்தில் மொடக்குறிச்சி வட்டார உதவி வேளாண்மை இயக்குநா் (பொ) ரேகா கலந்துகொண்டு இப்பணியைத் துவக்கி வைத்தாா்.

மொடக்குறிச்சி வட்டாரத்தில் சுமாா் 30 ஹெக்டோ் பரப்பளவில் மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ளது. இதில், தற்போது படைப்புழுத் தாக்குதல் பெருமளவில் காணப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த ஒட்டுமொத்த பரப்பளவில் பூச்சி மருந்து தெளிப்புப் பணிகள் நடைபெறுகிறது. பூச்சி மருந்துகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேலும், இதற்கு ஒரு ஏக்கருக்கு ரூ. 500 மானியமும் வழங்கப்படுகிறது.

இதில், மொடக்குறிச்சி துணை வேளாண்மை அலுவலா் செல்வராஜ், உதவி வேளாண்மை அலுவலா்கள், உதவி தொழில்நுட்ப மேலாளா் லட்சுமி, கோபி ஜே.கே.கே. வேளாண்மை கல்லூரி மாணவா்கள், விவசாய குழு உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com