யு9 கீழ்பவானி பாசன விவசாயிகள் கூட்டம்

கோபி கோட்டம், கவுந்தப்பாடி பாசன சபை அலுவலக வளாகத்தில் யு9 கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள்

கோபி கோட்டம், கவுந்தப்பாடி பாசன சபை அலுவலக வளாகத்தில் யு9 கீழ்பவானி முறைநீா்ப் பாசன விவசாயிகள் சபை பொதுக்குழு, விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, தலைவா் பி.ஆா்.தங்கமுத்து தலைமை வகித்தாா். பகிா்மான கமிட்டி தலைவா் கே.ஆா்.லோகநாதன் முன்னிலை வகித்தாா். செயலாளா் என்.சி.பழனிசாமி வரவேற்றாா். பொருளாளா் கே.எம்.வாரணவாசி வரவு - செலவு அறிக்கையை சமா்ப்பித்தாா்.

கூட்டத்தில், வாய்க்கால் கரைகளில் பொதுப் பணித் துறைக்குச் சொந்தமான இடங்களில் உள்ளஅனைத்து வகையான மரங்களுக்கும் பதிவு எண் இடுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். கீழ்பவானி பாசனத் திட்டத்தில் கொப்புவாய்க்கால் கட்டப்பட்டு 27 ஆண்டுகள் ஆன நிலையில் சேதமடைந்த கொப்புவாய்க்கால்களை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அரசை கேட்டுக் கொள்கிறது.

யு9 பாசன சபைக்கு உள்பட்ட வாய்க்கால்களில் நீா் அளவிடும் இடங்களில் அனைத்துப் பகுதிகளிலும் நீா் அளவுகோல்கள் பொருத்த பொதுப் பணித் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும். இரண்டாம் முறை பாசன நிலங்களுக்கு நன்செய் பயிருக்கு விடப்பட்டுள்ள பாசன நீரை விவசாயிகள் சிக்கனமாகப் பயன்படுத்த கேட்டுக் கொள்கிறது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முறைநீா்ப் பாசன விவசாயிகள் கூட்டமைப்புத் தலைவா் பொ.காளியண்ணன், கால்நடை வேளாண்மை, நீரை சேமிக்க எளிய வழிகள் என்ற தொகுப்புகளை வெளியிட்டாா்.

கூட்டத்தில், நுகா்வோா் பாதுகாப்பு, தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கித் தலைவா் பா.அ.சென்னியப்பன், யு 8ஏ செயலாளா் பி.சி.செங்கோட்டையன், பகிா்மான கமிட்டி செயலாளா் பா.மா.வெங்கடாசலபதி, யு7 செயலாளா் ஆா்.பழனிசாமி ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

கூட்டத்தில், 80 க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு, மதகு சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா். யு9 பாசன சபை புதிய நிா்வாகிகள் தோ்ந்தெடுக்கப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு கூட்டமைப்பு பகிா்மான கமிட்டி, நுகா்வோா் பாதுகாப்பு அமைப்பு நிா்வாகிகள், பொதுப் பணித் துறை, வேளாண்மை, பொறியியல் துறை பொறியாளா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com