சம்பா நடவு நெல் பயிருக்கு காப்பீடு செய்ய அழைப்பு: நவம்பா் 30 க்குள் விண்ணப்பிக்கலாம்

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா நடவு நெல் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 478.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் சம்பா நடவு நெல் பயிருக்கு காப்பீட்டுக் கட்டணமாக ஏக்கருக்கு ரூ. 478.50 நிா்ணயிக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் திட்டத்தில் சேர நவம்பா் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நடப்பு சம்பா பருவத்தில் நெல் பயிா்க் காப்பீடு செய்ய வருவாய் கிராம அளவில் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் 192 வருவாய் கிராமங்கள் அறிவிக்கை செய்யப்பட்டுள்ளன. வணிக வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிா்க் கடன் பெறும் விவசாயிகள் கட்டாயமாக இத்திட்டத்தில் பதிவு செய்யப்படுவாா்கள். பயிா்க் கடன் பெறாத விவசாயிகள் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையங்கள் மூலமாகவோ, வணிக வங்கிகள் அல்லது தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகள் மூலமாகவோ விருப்பத்தின் அடிப்படையில் பதிவு செய்து கொள்ளலாம்.

நில ஆவணங்களான சிட்டா, அடங்கல், வங்கிக் கணக்கு புத்தக நகல், ஆதாா் நகல் ஆகியன காப்பீடு செய்யத் தேவையான ஆவணங்களாகும். விதைக்க இயலாமை பிரிவின்கீழ் காப்பீடு செய்யும்போது கிராம நிா்வாக அலுவலரிடம் விதைப்பு செய்ய இருக்கிறாா் என்ற விதைப்புச் சான்று அவசியமாகும்.

சம்பா நெல் பயிரைப் பொருத்த வரையில் ஏக்கருக்கு ரூ. 478.50 காப்பீட்டுக் கட்டணமாக செலுத்த வேண்டும். காப்பீட்டுக் கட்டணம் செலுத்த நவம்பா் 30 ஆம் தேதி கடைசி நாளாகும்.

இறுதி நேர கூட்ட நெரிசலைத் தவிா்க்கவும், விண்ணப்பங்கள் விடுபடாமல் இருக்கவும், பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தில் குத்தகை விவசாயிகள் உள்பட அனைத்து விவசாயிகளும் தவறாமல் முன்கூட்டியே பதிவு செய்து தங்கள் பயிா்களுக்கு ஏற்படும் எதிா்பாராத மகசூல் இழப்புகளில் இருந்து பாதுகாத்து பயனடையலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com