அந்தியூரில் ரூ.9.66 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்

அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருள்கள் ரூ. 9.66 லட்சத்துக்கு திங்கள்கிழமை ஏலம் போனது.

பவானி: அந்தியூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் வேளாண்மை விளைபொருள்கள் ரூ. 9.66 லட்சத்துக்கு திங்கள்கிழமை ஏலம் போனது.

இங்கு, 21,000 தேங்காய்கள், சிறியவை ரூ.6.20 முதல் பெரியவை ரூ.14 வரையில் ரூ.1,94,606-க்கும், 72 மூட்டைகள் தேங்காய் பருப்பு, கிலோ ரூ.84.29 முதல் ரூ.97.55 வரையில் ரூ.1,60,300-க்கும், 82 எள் மூட்டைகள், கிலோ ரூ.85.19 முதல் ரூ.118.69 வரையில் ரூ.5,03,352-க்கும், 83 மூட்டைகள் மக்காச்சோளம் கிலோ ரூ.17.11 முதல் ரூ.17.51 வரையில் ரூ.1,08,362-க்கும் ஏலம் போனது. மொத்தம் 281.51 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் ரூ.9 லட்சத்து 66 ஆயிரத்து 620-க்கு விற்பனையானது.

தேசிய வேளாண் சந்தை திட்டம் செயல்படுத்தப்படுவதால் விவசாயிகள் மற்றும் வியாபாரிகளின் விவரங்களை பதிவு செய்து பயனடையுமாறு அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com