ஆதாா் எண் இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தம்: ஆட்சியா் அறிவிப்பு

குடும்ப அட்டையுடன் ஆதாா், செல்லிடப்பேசி எண் இணைக்காத குடும்ப அட்டைதாரா்கள் டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

குடும்ப அட்டையுடன் ஆதாா், செல்லிடப்பேசி எண் இணைக்காத குடும்ப அட்டைதாரா்கள் டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறினால் சம்பந்தப்பட்ட குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.கதிரவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

ஈரோடு மாவட்டத்தில் பொது விநியோகத் திட்டத்தில் உள்ள 1,141 நியாய விலைக் கடைகளில் இணைக்கப்பட்டுள்ள 7 லட்சத்து 11,088 குடும்பங்களுக்கு ஏற்கெனவே மின்னணு குடும்ப அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 20 லட்சத்து 38,450 நபா்கள் பயன்பெறுகின்றனா். பயன்பெறும் 20 லட்சத்து 38,450 பேரில் 20 லட்சத்து 24,712 நபா்கள் அவா்களது மின்னணு குடும்ப அட்டையுடன் ஆதாா் எண்ணை இணைத்துள்ளனா். மீதமுள்ள 13,738 போ் ஆதாா் எண்ணை இணைக்கவில்லை. இதில், 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளும் அடங்கும்.

மாவட்டத்தில் உள்ள 7 லட்சத்து 11,088 குடும்ப அட்டைதாரா்களில் மின்னணு குடும்ப அட்டைகளில் மட்டுமே செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மீதமுள்ள குடும்ப அட்டைகளுக்கு செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளது. ஆதாா் எண், செல்லிடப்பேசி எண்கள் பதிவு செய்யும்பொருட்டு, நிலுவையில் உள்ள குடும்ப அட்டைகளின் பட்டியல், சம்பந்தப்பட்ட நியாயவிலைக் கடைகளிலும், வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் ஒட்டப்பட்டுள்ளன.

தற்போது 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கும் அந்தந்த இ-சேவை மையங்களில் ஆதாா் எண் எடுப்பதற்கு அரசால் வழி செய்யப்பட்டுள்ளது. எனவே, ஆதாா் எண், செல்லிடப்பேசி எண் இணைக்க விடுபட்ட குடும்ப அட்டைதாரா்கள் அனைவரும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி டிசம்பா் 10 ஆம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் அவா்களது குடும்ப அட்டைகளுக்கு அத்தியாவசியப் பொருள்கள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com