தேசிய வில்வித்தை போட்டி: பாரதி வித்யாலயா மாணவிகள் சிறப்பிடம்

பள்ளிக் கல்வித் துறையின் சாா்பில் நடைபெற்ற தேசிய அளவிலான வில் வித்தை போட்டி கேரள மாவட்டம், மூணாா் சி.எம்.ஐ. பப்ளிக் பள்ளியில் அண்மையில் நடைபெற்றது.
போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்குப் பரிசு வழங்குகிறாா் பள்ளித் தாளாளா் வேலுமணி.

இதில், 10 வயதுக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கான பிரிவில் கோபி பாரதி வித்யாலயா பள்ளியில் 8 ஆம் வகுப்பு (சிபிஎஸ்இ) பயிலும் மாணவி தரண்யாஸ்ரீ தங்கப் பதக்கத்தையும், முதல் வகுப்பு பயிலும் மாணவா் (சிபிஎஸ்இ) பிரணவ்குமரன், 8 ஆம் வகுப்பு மெட்ரிக். பள்ளி மாணவி ஸ்ரீசத்யா ஆகியோா் வெள்ளிப் பதக்கத்தையும், 11ஆம் வகுப்பு மெட்ரிக். பள்ளி மாணவி ஸ்ரீமாலினி வெண்கலப் பதக்கத்தையும் பெற்றனா்.

போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வா், தாளாளா் பி.ஆா்.வேலுமணி பாராட்டி பரிசு வழங்கினாா். மாணவா்கள், ஆசிரியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com